கவிஞன் ஒருவன் நிலவிடம் மயங்கி
தன்னை தொலைக் தொடர்ந்தான்....
எண்ணவோ உன்னிடம் ஒர் ஈர்ப்புவிசை
உள்ளதென தேடல் தொடர்தால்...
மணப் பெண் போல வெட்கம் கொண்டு
மேக தோழியிடம் ஒளிந்து கொள்கிறாய்....
என்னதான் உள்ளது அப்படி என
எண்ணத் தேடலைத் தொடர்ந்தேன்...
வெண் நிற அழகு கவர்ந்ததா அல்லது
கதாபாத்திரம் கவர்ந்ததா...
தெரியாத பதிலுடன்
தேடலைத் தொடர்ந்தேன்...
வழி அறியா பயனியாய்
தொலைதூர சாலை போல
நீண்ட பதில் எதிர்நோக்கி...
தேடலைத் தொடர்ந்தேன்
இரை தேடும் பறவை போல...
விளைவு வரம் கிடைத்தது
பௌர்ணமியாய்...
ஆனால் நீடிக்க வில்லை
ஒரு நாள் பூத்து மடியும் பூப்போல
புதைந்து போனாள்...
மாலையில் தோன்றி மயங்க வைத்த
மாய தேவதை மாயமாய் மறைந்தாள்..
கவலையுடன் காத்திருந்தேன்
கவிதை எழுதி...
மீண்டும் வாருவாய் என ...
__ Myma

Nice
ReplyDelete